தமிழகத்தில் செயல்வழி கற்றல் முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தமிழக அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் விஜயகுமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் செயல்வழி கற்றல்முறை சிறப்பாக செயல்படுகிறது என்று இணை மறு ஆய்வு குழு தனதுபாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி, கர்நாடகா, சத்தீஷ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களிலும் செயல்வழி கற்றல் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
செயல்வழி கற்றல் முறையானது 5ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. 6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் 9-வது வகுப்பிலும் படைப்பாற்றல் கல்வி தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.