Tuesday, 5 March 2013

செயல்வழி கற்றல்: தமிழகத்தில் ம.பி குழு அதிகாரிகள் ஆய்வு

தமிழகத்தின் செயல் வழி கற்றல் முறையை, மத்திய பிரதேசத்தில்அமல்படுத்த, அம்மாநில அதிகாரிகள் குழு, இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்துஉள்ளனர். மத்திய பிரதேசத்தில் கல்வித்துறையை மேம்படுத்த, செயல் வழிகற்றல்முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். ஒன்றாம்

வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள செயல்வழி கற்றல் முறை குறித்து, ம.பி.,அதிகாரிகள் குழு, முதல்கட்டமாக, ராமேஸ்வரம் பள்ளிகளில் ஆய்வு செய்துசென்றனர். இரண்டாம் கட்டமாக, அம்மாநில பயிற்சித் துறை இயக்குனர் வினல்தலைமையில், அதிகாரிகள் விஷ்ணுபிரகாஷ், வினய் குல்கர்னி உள்ளிட்ட ஐந்து பேர்,சென்னையில் உயர் அதிகாரிகளை சந்தித்து, திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்தனர்.

பின், ராமேஸ்வரம், தனுஷ்கோடி பள்ளிகளில் ஆய்வு செய்தனர். "மாணவர்கள், செயல் வழி கற்றல் மூலம் எந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர்"என, கேள்விகள் கேட்டனர். குழுவினர் கூறுகையில், "வாசிப்பு திறன், கணிதப்பாடங்களில், தமிழக மாணவர்கள் திறம்பட உள்ளனர். இத்திட்டத்தை விரைவில்மத்திய பிரதேசத்தில் துவங்க உள்ளோம்" என்றனர்.