Monday, 30 September 2013

மாற்று கல்விக்கானவாசிப்பு முகாம்-8


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாற்றுக்கல்விக்கான 8வது வாசிப்பு முகாம் செப்டம்பர்28,29 ஆகிய நாட்களில் சென்னை-கிழக்குதாம்பரத்தில் நேசனல் பள்ளியில் நடைபெற்றது.

அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர்ஆர்.நீலா தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழுஉறுப்பினர் ஜெ.பாலசரவணன்வரவேற்றுப்பேசினார். மாநிலகல்வி உபகுழுஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் முன்னிலைவகித்தார். கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி வாசிப்பு முகாமினைத் துவக்கி வைத்துப் பேசினார்.



சர்வதேச அளவில் மாற்றுக்கல்விக்கான தந்தை என்று கல்வியாளர்கள் கொண்டாடப்படும் பிரேசில் நாட்டுக் கல்வியாளர் *பாவ்லோ பிரைரே*அவர்களால் எழுதப்பட்டு 1970களில் வெளிவந்து உலகம் முழுவதும் எழுத்தறிவிற்கான விழிப்புணர்வு ஏற்படவும் 70க்கும் மேற்பட்ட நாடுகள் கல்வி குறித்த சட்டங்களையும் திட்டங்களையும் அறிவிக்க காரணமாக அமைந்த புத்தகம்… *ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை. *இந்த புத்தகம் நடைமுறையில் இருக்கின்ற கல்விமுறையினை வங்கிமுறைக் கல்வி என்றும் இன்றைய வகுப்பறைகள் எடுத்துரைக்கும் நோயால் அவதியுறுகின்றன என்றும் மாணவர்களை உயிருள்ள ஜூவன்களாகக் கருதாமல் உயிரற்ற பருப்பொருள்களாக கருதுகின்றது என்றும் சாடுகிறது. மாற்றாக உரையாடல் மூலமாக கற்றலை வலியுறுத்துகிறது. ஆசிரியரின் மாணவர், மாணவரின் ஆசிரியர் என்ற நிலை மாறி ஆசிரிய மாணவர், மாணவ ஆசிரியர் என்ற புதிய வகுப்பறை உறவை அறிமுகம் செய்கிறது. இன்றைய பாடபுத்தகங்கள் உலகை அந்நியப்படுத்துகின்றன. உலகப் பொருட்களை, பிரச்சினைகளை மாணவர்களின் உணர்வுநிலைக்குள் கொண்டு செல்ல மறுக்கின்றன… என கல்வி குறித்த பல்வேறு புதிய சிந்தனைகளையும் கல்வியின் அரசியலையும் இந்த புத்தகம் முன்வைக்கிறது.


எழுத்தாளர் ஆயிசா நடராஜன், பேராசிரியர்கள்ராஜூ, சிவக்குமார், விஜயகுமார், பொன்ராஜ்ஆகியோர் புத்தகத்தின் பல்வேறு அத்தியாயங்களுக்கான கருத்துரையாற்றினார்.கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கானகல்விமுறையின் இன்றைய பொருத்தப்பாடும்நமது செயல்பாடுகளும் என்ற தலைப்பில்கருத்துரை வழங்கினார். மாநிலத் தலைவர்பேராசியர்.மணி மாற்றுக் கல்விக்கான எதிர்காலத்திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்துநிறைவுரையாற்றினார்.

தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் என 50 பேர் பங்கேற்று, உலகின் சிறந்தகல்வியாளர் பாவ்லோ பிரைரேயின்ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கானகல்விமுறை என்ற நூலை குழுவாக படித்துவிவாதித்தனர்.


அறிவியல் இயக்கம் சென்னை மாவட்ட செயலாளர்சக்திவேல், மாவட்டத் தலைவர் ரவிக்குமார், ,மாவட்ட நிர்வாகிகள் சி.பி.ராமச்சந்திரன், பலராமன்,இளங்கோ, மோகனா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


மண்டல அளவிலும் மாவட்ட அளவிலும் வாசிப்புமுகாமினை நடத்துவது எனவும்தீர்மானிக்கப்பட்டது.அடுத்த மாநில வாசிப்புமுகாம் டிசம்பர் 28,29 நாட்களில் திருச்சிமாவட்டத்தில் நடத்துவது என்று முடிவுஎடுக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர்உதயன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment