தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் உள்ள பச்சையப்பா உயர் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகத் தலைவர் திருமிகு லட்சுமிவாசன் தலைமை வகித்தார்.பள்ளித்தலைமையாசிரியர் வரவேற்றார். உத்தமபாளையம் கிளைத் தலைவர் திருமிகு. வளையாபதி வாழ்த்துரை வழங்கினார். கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர். க.முத்துக்கண்ணன் ஆசிரியர்களுக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்திப் பேசினார். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இது போன்ற நிகழ்வுகளில் புத்தக்கங்களை அறிமுகப்படுத்துவது நல்ல வரவேற்ப்பை தருகிறது. பல ஆசிரியர்கள் அப்புத்தகங்களை நம்மிடம் கேட்டிருந்தனர். தொடர்ச்சியாக இப்பணிகளில் கவனம் செயல்படுவது அமைப்பிற்கு நல்லது.
டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. 8 ஆசிரியர்கள், 150க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டனர். ஆசிரியர் இணைய ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஞானசுந்தரி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்
அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் திருமிகு செந்தில்குமரன் தலைமை தாங்கினார். முத்தனம்பட்டி கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். திருமதி விஜயா வாழ்த்துரை வழங்கினார். தமிழாசிரியை திருமதி. சாந்தி வரவேற்றார். இப்பள்ளி தொடர்ந்து5ஆண்டுகள் 100% தேர்ச்சி அடைய காரணமாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கல்வி வளர்ச்சி கழகத்தின் மாவட்ட செயலர்.திருமிகு. இதயகீதன் சிறப்புரை வழங்கினார். அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு. சுந்தர் நிறைவுரையாற்றினார். ஆசிரியர் திருமிகு. மோகன்குமாரமங்கலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுமன் நன்றி கூறினார். சமகால கல்வி தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. ”போயிட்டு வாங்க சார்” நூல் அறிமுகம் செய்யப்பட்டது.இந்நூல் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
–க.முத்துக்கண்ணன்.tnsf
No comments:
Post a Comment