மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வதேச எழுத்தறிவு தினம் தீபம் மேம்பாட்டு இயக்கத்துடன் இணைந்து திருமங்கலத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஆசிரியர் சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார். முத்துலட்சுமி, வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புரை மாவட்டச் செயலாளர் மொ. பாண்டியராஜன் நிகழ்த்தினார். காசிப்பாண்டியன், காமேஷ், பிரேமா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருமங்கலம் கிளையும் அப்பகுதி தீபம் மேம்பாட்டு இயக்கமும் இணைந்து செய்திருந்தது. சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment