சென்னை: இந்தியாவில் ஐ.ஐ.டி.,கள் மற்றும் ஐ.ஐ.எம்.,களை அடுத்து, முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அறியப்படும் மத்தியப் பல்கலைகளில், அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
மொத்தம் 39 மத்திய பல்கலைகளின், மொத்த ஆசிரியர் பணியிடங்களான 15,573 என்ற எண்ணிக்கையில், 40% பணியிடங்கள் வரை நிரப்பப்படாமல் உள்ளன. 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழகம், தனது மொத்த ஆசிரியர் எண்ணிக்கையான 151 என்ற நிலைக்கு மாறாக, வெறும் 28 பேராசிரியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன்படி பார்த்தால், இப்பல்கலையில் மட்டும் 80% ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது தெரியவருகிறது.
இதைவிட மோசமான நிலையில் இருப்பது ஒடிசா மாநிலத்தின் மத்தியப் பல்கலைக்கழகம். அங்கே, தேவையான பேராசிரியர் எண்ணிக்கையில் மொத்தம் 11.6% மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்த 2 பல்கலைகளுமே, 2009ம் ஆண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டவை.
நன்றி: தினமலர்,பிப்.14.2014
No comments:
Post a Comment