Saturday, 13 September 2014

சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் கையெழுத்து இயக்கம்

சிவகங்கை
First Published: Sep 13, 2014 12:13 AM
Last Updated: Sep 13, 2014 12:13 AM

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிவகங்கையில் அரசுபள்ளிகளைப் பாதுகாப்போம் பலப்படுத்துவோம் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசுபள்ளிகளைப் பாதுகாப்போம் பலப்படுத்துவோம் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் சாஸ்தா சுந்தரம் தலைமை வகித்தார். கிளைத்தலைவர் தனக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார்.. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் இவற்றை உறுதிப்படுத்த வேண்டும். நலத்திட்ட உதவிகளுக்கென தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். கல்வியில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும்.. அதிக நிதி ஒதுக்கி அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்து பலப்படுத்திட வேண்டும். மத்திய மாநில அரசு-தனியார் கூட்டு மாதிரிப்பள்ளித் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசிடம் தெரிவிப்பதற்காக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்தக் கையெழுத்து இயக்கத்தை சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன் கையெழுத்திட்டு தொடக்கிவைத்தார். தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்டச்செயலாளர் பாலசுப்ரமணியன், தமுஎகச கிளைச்செயலாளர் தமிழ்ச்செல்வம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொருளாளர் சிங்கராயர், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் மெய்யப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் குமரேசன், பிரபாகரன், கவிஞர் மு.தமிழ்க்கனல், அசோக் பாரதி, ஜெயக்குமார், சமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, விஞ்ஞானி ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் கிளைச்செயலாளர் பஞ்சுராஜ் நன்றி கூறினார்..

No comments:

Post a Comment