Friday, 19 September 2014

ஆசிரியர் தின கட்டுரை முடிவுகள் அறிவிப்பு



கம்பம் : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ளது. இயக்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் தே.சுந்தர் கூறியதாவது :
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட "என் இதயம் கவர்ந்த ஆசிரியர்' என்ற தலைப்பிலான போட்டியில் சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருபமதிவதனி முதல் பரிசையும், ஜி.கல்லுப்பட்டு புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி இரண்டாம் இடத்தையும், தேனி மேலப்பேட்டை இந்துநாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் தீபக்ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
"வகுப்பறையில் வசந்தம்' என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான போட்டியில் பழனிசெட்டிபட்டி ஆசிரியை மணிமாலா முதல் இடத்தையும், கூடலூர் கள்ளர்பள்ளி ஆசிரியர் அழகேசன் இரண்டாம் இடத்தையும், சீலையம்பட்டி பாரதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
"இப்படித்தான் இருக்க வேண்டும் வகுப்பறை' என்ற கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் வீரபாண்டி தேனி கலைஅறிவியல் கல்லூரி மாணவி பாண்டீஸ்வரி முதல் இடத்தையும், உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி ரேவதி இரண்டாம் இடத்தையும், இதே கல்லூரி மாணவி அராபத்நிஷா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
ஆர்வலர்களுக்கான அரசு பள்ளிகள் போட்டியில் ஆண்டிபட்டி எட்வர்டு இன்பராஜ் முதல் இடத்தையும், தேவாரம் இளங்கோவன் இரண்டாம் இடத்தையும், மொட்டனூத்து துரைசுப்ரமணியன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினர்.

No comments:

Post a Comment