Tuesday, 9 September 2014

பள்ளிக் கல்வியை காப்பதற்காக பிரச்சார இயக்கம்

செப்டம்பர்.9
தி தமிழ் இந்து:

தமிழக பள்ளிக் கல்வியை காப்பதற்காக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களிடம் அதன் நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழக பள்ளிக் கல்வியை சீரழித்துள்ள கொள்கைகள், தனியார் பள்ளிகளின் வணிகமயம் என எல்லாவற்றையும் விமர்சனத்துக்குஉட்படுத்தி தமிழக பள்ளிக் கல்வியை காக்கும் ஒரு பேரியக்கம் சர்வதேச எழுத்தறிவு தினத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு, அரசுப் பள்ளி மக்கள் பள்ளி, பாதுகாப்போம், பலப்படுத்துவோம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம்.

அரசுப் பள்ளிகளை காக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கிட வேண்டும். சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் உறுதி செய்யப்பட வேண்டும். கல்வியில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பத்து லட்சம் கையெழுத்துகளைப் பெற்று அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளோம். மேலும், வீதி நாடகங்கள், விழிப்புணர்வு பாடல்கள் உள்ளிட்ட கலைப் பயணம் மூலமாகவும் இப்பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாகவும் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெற்று கோரிக்கை பிரகடனத்தை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்றனர்.

No comments:

Post a Comment