Friday, 19 September 2014

துளிர் இல்லம் சார்பில் கையெழுத்து இயக்கம்

By புதுக்கோட்டை
First Published : 18 September 2014 01:13 AM IST

தினமணிபுதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள துளிர் இல்லம் சார்பில் அரசுப்பள்ளி மக்கள் பள்ளி, அதனை பாதுகாப்போம், பலப்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் கூடிய பிரசார கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, துளிர் இல்லத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ. மணவாளன் பேசுகையில், வகுப்பறையில் குழந்தைகள் மகிழ்ச்சியாக கற்கும் சூழலை உருவாக்க வேண்டும். மகிழ்ச்சியான குழந்தைகள் வாழும் பட்டியலில் இந்தியா 116-வது இடத்தில் உள்ளது மிகவும் வருந்தத்தக்கது. குழந்தைகள் வகுப்பறையைத் தாண்டி சமூகத்தில் நிலவும் அனுபவங்களைக் கற்க வேண்டும் என்றார். துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். சுப்பிரமணியன், மாவட்டச் செயலர் எம். வீரமுத்து, ஆர். தமிழ்செல்வி ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment