Tuesday, 9 September 2014

எழுத்தறிவு தினத்தையொட்டி பிரசார இயக்க கருத்தரங்கம்

செப்.9, விழுப்புரம்: 

சர்வதேச எழுத்தறிவு தினத்தை யொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பிரசார இயக்க கருத்தரங்கு விழுப்புரத்தில் நடந்தது. சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான பிரசார இயக்கம் தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. இதையொட்டி விழுப்புரம் சாந்தி நிலையம் போதி ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பிரசார இயக்க கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட தலைவர் சுதா தலைமை தாங்கினார். கருத்தரங்கை கல்வியாளர் மாதவன் துவக்கி வைத்தார். பொருளாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். கருத்தாளர் மோகன், மாவட்ட செயலாளர் பால முருகன் சிறப்புரையாற்றினர். சாந்தி நிலையம் நிறுவனர் அந்தோணி குரூஸ், கல்விக்குழு நிர்வாகிகள் சேகர், சண்முகசாமி, முருகன், செந்தில் முருகன், இளங்கோவன், அருள், ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment