ஹரியாணா மாநிலத்தில், வரும் கல்வியாண்டில் பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும் என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறினார்.
இதுகுறித்து சண்டீகரில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வரும் கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதை மந்திரங்கள் கற்பிக்கப்படும்.
தற்போது நடைபெற்று வரும் மாநில பட்ஜெட் கூட்டத்தில், பசுவதை தடை சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் பணியிட மாற்றத்தில் புதிய கொள்கையை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, இடமாற்றம் என்பது ஒழுங்கு நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், அவர்களின் செயல்பாட்டை பொருத்தும் இருக்கும்.
அதேபோல, ஹரியாணாவை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். சூரிய ஒளி முலம் 400 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
விவசாயிகளின் மின்கட்டண நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. மாறாக, உரிய காலத்துக்குள் மின் கட்டணத்தை செலுத்தும் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 4,000 கிராமங்களுக்கு இணையதள இணைப்பு வழங்கப்படும் என்று மனோகர் லால் கட்டார் கூறினார்.
நன்றி: தினமணி நாளிதழ்
பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை: விரைவில் ஹரியாணா அரசு அறிமுகம்
பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
புதுடில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. கிழக்கு மும்பை பகுதியில் உள்ள, பள்ளி மாணவர்களிடையே தார்மீக பலத்தை அதிகரிப்பதற்கு, பள்ளிகளில் பகவத் கீதையை கற்பிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து, டில்லி
உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு
மும்பை நகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ’மாணவர்கள்
சுயமாக முடிவெடுக்கும் வகையில் அவர்களுடைய திறனை அதிகரிப்பதற்காக, பகவத்
கீதையை கற்பிக்க முடிவு செய்யப்பட்டது’ என்று கூறப்பட்டது.
இந்த
வழக்கை நேற்று விசாரித்த, உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள
பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அனுமதிக்க முடியாது
என்று உத்தரவிட்டது.
நன்றி: தினமலர் நாளிதழ்
No comments:
Post a Comment