பதிவு செய்த நாள்: மே,3,2014
கூடலூர் : மாநில அளவிலான மாற்றுக்கல்வி வாசிப்பு முகாம், கூடலூரில் இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது. ஆசிரியர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், அருகாமையில் உள்ள பொதுப் பள்ளிகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாற்றுக்கல்வி வாசிப்பு முகாம், இன்று (மே 3) கூடலூர் என்.எஸ்.கே.பி.,பள்ளியில் துவங்குகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாநில அளவில் நடக்கும், இந்த முகாமில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்று முதல், தொடர்ந்து 3 நாட்கள் நடக்கும் இம்முகாமில், எழுத்தாளர் நிரஞ்சனா எழுதிய "நினைவுகள் அழிவதில்லை' எனும் நாவலும், தமிழகக் கல்விச்சூழல் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வெளியிட்ட, சென்னை அறிக்கையும், முகாமில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட உள்ளன. வாசிப்பை நேசிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் விபரங்களுக்கு 94 886 83 929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment