பதிவு செய்த நேரம்:2014-05-03 12:48:34
கூடலூர், :ஆசிரியர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், பொதுப்பள்ளிகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம்களை மாநில அளவில் நடத்தி வருகிறது. பத்தாவது மாநில அளவிலான வாசிப்பு முகாம் கூடலூர் என்எஸ்கேபி மேல்நிலைப்பள்ளியில் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை நடக்கிறது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மற்றும் கல்வி ஆர்வலர்கள் முகாமில் கலந்து கொள்கின்றனர். தமிழக கல்விச்சூழல் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வெளியிட்ட அறிக்கையும் முகாமில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.கல்வியாளர்கள் பலர் கலந்து கொள்ளும் இம்முகாமில் ஆசிரியர்கள் கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு அறிவியல் இயக்க தேனி மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி: தினகரன்
No comments:
Post a Comment