By கம்பம்
First Published : 06 May 2014 12:10 AM IST
பள்ளி ஆசிரியர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் கூடலூர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாசிப்பு முகாம் 2 நாள்கள் நடைபெற்றது.
ஆசிரியர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், பொதுப்பள்ளிகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்களை மாநில அளவில் நடத்தி வருகிறது. பத்தாவது மாநில அளவிலான வாசிப்பு முகாம் கூடலூர் என்எஸ்கேபி மேல்நிலைப்பள்ளியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
முகாமின் துவக்க விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலர் தே.சுந்தர் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எம்.நீலா, பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலர் வி.வெங்கட் ராமன் வரவேற்றுப் பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.மணி வாசிப்பு முகாமில் விவாதிக்கப்பட உள்ள புத்தகங்கள் மற்றும் அறிக்கைபற்றி அறிமுக உரையாற்றினார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமணி
நன்றி: தினமணி
No comments:
Post a Comment