நண்பர்களே ,ஈரோடு மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான புத்தக வாசிப்பு முகாம் ஈரோட்டில் 11.1.2014,12.1.2014 சனி,ஞாயிறு அன்று நடைபெற்றது. இம்முகாமை ,பேரா.மோகனா தொடங்கி வைத்து ,ஆசிரியர்களுக்கான புத்தகங்களை அறிமுகம் செய்தார்.பின்னர் சுய அறிமுகம் செய்யப்பட்டு,வாசிப்பும்,விவாதமும் ,குழுவாக மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு அமர்வாக,குழுவில் விவாதித்த கருத்துக்கள் பொது அமர்வில் வைக்கப்பட்டு,விவாதம் மேற்கொள்ளப்பட்டது.ஞாயிறு காலை "இயற்கை உலா"நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.இதனை திரு.க.பரமசிவம் ஒருங்கிணைத்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.பாலசரவணன், மாநிலத்தலைவர் பேரா.மணி ,ஆகியோர் இம்முகாமை பற்றிய மதிப்பீடுகளை வழங்கினர். முடிவில் மாவட்ட செயலாளர் கார்த்தி நன்றி நவிழ ,முகாம் இனிதே நிறைவுற்றது.இம்முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து,42 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment