தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே பல்வேறு ஏற்றத் தாழ்வான, பாகுபாடுகளுடன் கூடிய கல்விமுறை நிலவுவதால், இதனை மாற்றி அனைவருக்கும் ஒரே வகை யான சமச் சீரான கல்வியைத் தர வேண்டும் என்கிற நோக்கில் கொண்டு வரப்பட்டதுதான், ‘சமச் சீர் கல்வி’ முறை Uniform system of school education சுருக்கமாக USSE.
கடந்த திமுக ஆட்சியில் 2009 ஆம் ஆண்டு நவம்பர் 30 லிருந்து நடை முறைக்கு வந்த இந்தச் சட்டம் கடந்த 2010-11 கல்வி ஆண்டில் முதல் வகுப் புக்கும் 6ஆம் வகுப்புக்கும் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு முடிய, மற்றும் 7ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு முடிய ஆன வகுப்பு களுக்கு இந்த 2011-12 கல்வி ஆண்டில் நடை முறைப்படுத்த முடிவு செய்யப் பட் டது. இதன்படி இந்த ஆண்டு இதன் செயலாக்கத்திற்கான அனைத்து ஏற் பாடுகளும் செய்யப்பட்டு ரூ. 200 கோடி செலவில் 9.5 கோடிக்கும் மேற் பட்ட பாட புத்தகங்களும் அச்சாக்கம் செய்யப்பட்டு அனைத்தும் தயாராக இருந்த நிலையில்தான், இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட புதிதாகப் பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சமச்சீர்கல்வியை சந்தியில் நிறுத்தியது.
இந்த நடவடிக்கைக்கு ஆட்சி யாளர்கள் சொல்லும் ஒரே காரணம் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தங்கள் தரமானவையாக இல்லை. சமச்சீர் கல்வி என்பது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டுமேயல்லாது அதைத் தாழ்த்தி விடுவதாக இருந்துவிடக் கூடாது. அகில இந்திய அளவிலான போட்டி யில். கல்வித் தரத்தில் தமிழக மாணவர் கள் பின்தங்கி விடக்கூடாது, தவிரவும் தற்போது அச்சாக்கம் செய்யப்பட் டுள்ள சமர்சீர் கல்விப் பாடபுத்தங்க ளில் கடந்த கால ஆட்சியாளர்களின் பிரச்சாரமே மேலோங்கி கல்வி அரசிய லாக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக் குத் தேவை தரமான கல்வியே அன்றி அரசியல் அல்ல. எனவே இதை முற் றாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் அதுவரை இந்த ஆண்டுக்கு பழைய கல்வித் திட்டத்திலே உள்ள பாட புத்தங்களையே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
மேலோட்டமாக நோக்க அர சின் இந்த முடிவு நல்லதுதானே, நியாய மனாதுதானே என்று தோன்றும் அதே வேளை இது எங்கே சமச்சீர் கல்வித் திட்டத்தையே குழிதோண்டிப் புதைப் பதாக அதற்கு சமாதி கட்டுவதாக ஆகி விடுமோ என்பதான சந்தேகத்தையும் இது கல்வியாளர்களியே ஏற்படுத்தி யுள்ளது இந்நிலையில் இதுபற்றி பரிசீலனைக்காக சில:
1. சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாட புத்தக ங்கள் அனைத்தும் தரமானவையே என்று யாரும் சொல்லவில்லை, அவற் றுள் குறைகள் நிறைய இருக்கின்றன. அவை களையப்பட வேண்டும். செம் மைப்படுத்தப்பட வேண்டும். என்பதி லும் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
2. பாட நூல்கள் சில இப்படித் தரம் குறைவாக இருப்பதன் காரணம் பாடப்புத்தகம் தயாரித்த கல்வியாளர் களுக்கு இது முதல் முயற்சி என்பதாக இருக்கலாம். அல்லது அக்கறைக் குறைவு பொறுப்பின்மை காரணமாக வும் இது நேர்ந்திருக்கலாம். எதுவானா லும் இது பாடபுத்தக் தயாரிப்பில், நடைமுறையில் உள்ள குறைபாடு தானே தவிர, சமர்சீர்கல்வி சார்ந்த கொள்கையின் குறைபாடு அல்ல.
3.இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற அரசு என்ன செய்தி ருக்கவேண்டும். தரமற்றதும், சர்ச்சைக் குரியதும், அரசியலாக்கப்பட்டுள்ளது எனக் கருதப்படுவதுமான பகுதிகளை மட்டும் நீக்கி, ஏற்கெனவே திட்ட மிட்டபடி சமர்சீர் கல்வியை செயல் படுத்தியிருக்க வேண்டும். வழக்கம் போல ஜூன் முதல் வாரமே பள்ளி திறந்து பாடங்களை நடத்திக் கொண்டே ஒரு மாதத்தில் நீக்க வேண்டிய சேர்க்க வேண்டிய பகுதி களைத்தனித் துணை நூலக வெளி யிட்டு இதைச் செய்திருக்கலாம்.
4. இப்படிச் செய்திருந்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் நேர்ந்தி ருக்காது. இடைப்பட்ட குழப்பங்க ளுக்கும் வழக்குகளுக்கும் காலதாமதத் திற்கும் இடம் இருந்திருக்காது. யாரும் எந்தப்பாடமும் நடத்த முடியாமல் இப்படி வல்லுநர் குழுவின் முடிவுக்குக் காத்திருக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டிருக்காது. பாட புத்தகங்களை அழிக்க வேண்டிய அவசியமோ பொருள் விரயமோ, பணவிரயமோ ஏற்பட்டிருக்காது, வெறும் துணை நூல்கள் அச்சடிக்க வேண்டிய செலவோடு முடிந்து போயிருக்கும்.
மாறாக அரசு என்ன செய்தது. மே 13 இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மே 16 இல் முதல்வர் பொறுப்பேற்ற ஜெயலலிதா, அடுத்த ஒருவாரத்திற்குள்ளாகவே மே 22 இல் கூட்டிய ஒரு மணிநேரம் கூட முழுமை யாக நடைபெறாத தன் முதல் அமைச் சரவைக் கூட்டத்திற்கு . அடுத்த நாளே இந்த ஆண்டு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதுவே கல்வியாளர் மத்தியில் சந்தே கங்கள் ஏற்பட வழிவகுத்தது.
சமர்சீர் கல்வி அறிமுகப்படுத் தப்பட்ட நாளில் இருந்தே இதற்கு எதிராக தனியார் ஆங்கில வழிப்பள்ளி நிறுவனங்கள் எல்லா வகையிலும் சதி செய்து வருகிற நிலையில், அரசே இப் படி ஓர் அறிவிப்பை வெளியிட்டால்....
ஏற்கெனவே, தேர்தலுக்கு முன்பி ருந்தே இந்த ஆட்சி மாற்றத்துக்கு தனியார் ஆங்கிலப் பள்ளி நிறுவனங் கள் பெருமளவும் உதவி செய்ததாக ஒருபுறமும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்நிர்வாகிகள் பலரும் ஆட்சி யார்களைச் சந்தித்து தங்கள் காரி யத்தை நிறைவேற்றி வைக்கக் கண்டு கொண்டார்கள் என்று ஒரு புறமும் பரவலாக பேச்சுகள் அடிபட்டன
தவிர, இதற்கும் முன்பே, சமர்சீர் கல்விப் பாடபுத்தங்கள் தயாரிப்பு நிலையிலேயே, அதற்காக தயாரிக்கப் பட்ட முன்வரைவுகளை கல்வியாளர் கள் சிறப்பாகத் தயாரித்திருந்ததகாவும், இதைக்கண்ட ‘உரை நூல் போடும் நிறு வனங்கள்’ இப்படியெல்லாம் புத்தகங் கள் வந்தால் யாரும் உரைநூல் வாங்கிப் படிக்க மாட்டார்கள் ஆகவே புத் தகங்களைத் தங்களுடைய வணிகத் துக்கு பாதிப்பு வராத வகையில் தயா ரிக்கக் கோரி அதற்காக சம்பந்தபட்ட வர்களையும் கணிசமாக கவனித்ததாக ஒரு செய்தியும் பரவியிருந்தது.
இப்படி இவை எல்லாமுமாகச் சேர்ந்தே கல்வியாளர் மத்தியில், சனநாயக சமத்துவ உணர்வாளர், சமூக நீதிப் பற்றாளர் மத்தியில் இது கோபா வேசத்தை தூண்டியது.
ஏனெனில். சமச்சீர்கல்வி என்பது வெறும் கல்வி மட்டுமே சார்ந்த ஒரு பிரச்சனை அல்ல. இது சமுகத்தில் நிலவும் பொருளியல் சமுகவியல் ஏற்றத் தாழ்வு நீக்கம், பின்தங்கிய மற்றும் கடைநிலை சாதி மக்களின் முன்னேற் றம், தாய் மொழிக்கல்வி, சமுகத்தில் அனைத்துப் பிரிவு மக்களுக்குமான சமத்துவத்தையும் சமூகநீதியையும் வழங்குதல் ஆகி பல்வேறு பிரச்சனை களோடும் தொடர்புடையதாகும்.
எனவேதான் சமூக நீதி ஆர்வலர் கள் அரசின் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். ஆனால் அரசின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த விரும்பாத ஜெ தன் இயல்பான பிடிவாத குணம் காரண மாக 07.06.2011 அன்று சட்ட மன்றத் தில் சமச்சீர்க் கல்விச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி னார். சென்னை உயர்நீதி மன்றம் அச் சட்டத் திருத்தம் செல்லாது என அறி விக்க ஜெ. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏற்கெனவே முதல் மற்றும் 6 ஆம் வகுப்பில் அமலுக்கு வந்துள்ள சமர்ச்சீர் கல்வி அப்படியே தொடர வேண்டும், பிற வகுப்புகளுக் கான கல்வி குறித்து முடிவு செய்ய தமழக அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமிக்க வேண்டும்,, அந்த வல்லுநர் குழு இரண்டு வாரத்தில் இதை ஆய்வு செய்து அதன் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், அதன் பேரில் உயர்நீதிமன்றம் இது குறித்து ஆணையிடும் என அறிவித் ததன் அடிப்படையில் வல்லுநர் குழுவும் நியமிக்கப்பட்டு ஆய்வும் நடைபெற்றது.
இதற்கிடையே ஜெ அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே நடை முறைப்படுத்தக் கோரியும் நாடு தழுவி கல்வியாளர்கள் மாணவர்கள் பெற் றோர்கள் எனப் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பலரும் சந்தேகப்பட்டது போல் குழுவின் பரிந்துரைகள் சமச்சீர் கல்விக்கு எதிராக வந்தாலும் நீதி மன்றங்கள் அதை ஏற்காமல் சமச்சீர் கல்விக்கு ஆதரவாகவே தீர்ப்பளித் ததால் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்து விட்டது மேற்கொண்டுஎந்தப் போராட்டத் திற்குத் தற்போது தேவை யில்லாமலும் போய் விட்டது.
என்றாலும் பிரச்சனை இத்தோடு முடிந்துவிட்டதாகக் கருதி நாம் வாளாயிருந்து விடமுடியாது. காரணம் ஆதிக்கங்கள் எப்போதும் ஓய்ந்திருப்ப தில்லை. அது வாய்ப்புள்ள வழிகளி லெல்லாம் தலை து£க்கி மீண்டும் மீண்டும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளி லேயே எப் போதும் ஈடுபட்டிருக்கும். எனவே இது குறித்து எப்போதும் நாம் விழிப் புடன் இருக்க வேண்டும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு எப்படியோ ஓட்டி அடுத்த ஆண்டி லிருந்து இதற்கு ஏதாவது வில்லங்கம் வைக்கலாம் என்று கருதுவார்களே யானால அது ஒரு நாளும் நடக்காது நடக்க விட மாட்டோம். என்பதில் நாம் விழிப் போடும் உறுதியோடும் நிற்க வேண்டும். நிலமைகளின் போக்கை முன்னுணர்ந்து எதிர்வரும் 2011-12 கல்வி ஆண்டுக்கு முன்பா கவே கோடை விடுமுறையிலேயே தமிழகம் தழுவிய ஒரு மாபெரும் பேராட்டத்தைத் திட்டமிட்டு. சமச்சீர் கல்வியை நடைமுறைக்குக் கொண்டு வராமல் கல்வி நிறுவனங் களை நடத்தவிட மாட்டோம். ஆட்சியாளர்களை ஆள விட மாட் டோம் என்கிற அளவுக்கு தமிழகமே கொந்தளிக்கும் அளவிற்கு ஆவேசத் தோடும் எழுச்சியோடும் அப்போராட் டத்தை நாம் நடத்த வேண்டும். அதற்கு இப்போதி ருந்தே திட்ட மிட்டு அனைவரையும் இதை நோக்கி அணியப்படுத்தி வைக்க வேண்டும். இத்துடன் இதே போன்று முத்துக் குமரன் குழுவின் இதர பரிந்துரை களையும் படிப்படியாக நிறைவேற்ற அரசை வலியுறுத்த வேண்டும் அதற் காகவும் தொடர்ந்து போராட வேண்டும். அதற்கான விழிப்புணர் வையும் பெறவேண்டும்.
இது வரை இதற்காகப் போரா டிய பல்வேறு அமைப்புகள் கல்வி யாளர்கள்மாணவர்கள் பெற்றோர்கள் ஆகிய அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
*
சமச்சீர் கல்வியும் தி.மு.க.வும்
சமச்சீர் கல்வியைக் கடந்த ஆண்டு கொண்டு வந்ததில் கல்வியாளர்களுக்கும் தி.மு.க. ஆட்சிக்கும் பெரும் பங்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை. என்றாலும் கடந்த ஆண்டு முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு மட்டும் என்று கொண்டு வந்தபோதே பலர் மத்தியிலும் எழுந்த கருத்து, இதை இப்படிச் செய்யாமல், 1 முதல் 5 வரையிலான தொடக்கக் கல்வி முதலாவதும், 6 முதல் 8 வரையிலுள்ள வகுப்புக்கு இரண்டாவதும், 9, 10 வகுப்புகளுக்கு மூன்றாவதுமாக இதை மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றி விடலாம் என்பதுதான்.
ஆனால் தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதைச் செய்தாலும் அதில் ‘பொக்கை’ வைத்து எதிரிகள் அதில் நுழைந்து விளையாட வாய்ப்பளிக்கும் கருணாநிதி, இந்த சமச்சீர் கல்வியிலும் இப்படிப் பொக்கை வைத்து எதிரிகளுக்கு வாய்ப்பை வழங்கினார். அதன் பலனைத்தான் பள்ளி மாணவர்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
தி.மு.க. சமச்சீர் கல்வியில் இப்படி அரைகுறையாக நடந்து கொள்வதற்குக் காரணங்கள் உண்டு. ஒன்று அது தமிழின, சமத்துவ, சமூக நீதி உணர்வாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அதேவேளை தங்களைச் சார்ந்தவர்களின் பிழைப்புக்கும் எந்தவித பாதகமும் வந்துவிடக் கூடாது என்பதே இவை.
காட்டாக ஒன்று. முன்னாள் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை. இவர் சென்னை வேளச்சேரி பகுதி சீத்தாபதி நகரில் ‘ஒளிர் கதிரவன்’ (Sun Shine) என்கிற பெயரில் ஓர் ஆங்கில மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார். இதில் கல்வி கற்க முன் மழலை வகுப்புக்கு (LKG) நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு பரிந்துரை செய்துள்ள கட்டணம் ரூ. 24,000/-. இதே குழு மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.4050/-ஐ கட்டணமாக நியமித்துள்ளது. மழலையர் கல்விக்கு மட்டும் இந்தக் கட்டணம். அதாவது தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து தமிழைக் காத்ததாகச் சொல்லப்படுபவரின் வம்சா வழியினர் இப்படி ஆங்கில மழலையர் பள்ளி நடத்தி கல்வி வணிகம் செய்யும் போது - செந்தாமரை மடிப்பாக்கம் பகுதி புழுதிவாக்கம் ஏ.சி.எப். காலனியில ஒளிர் கதிர் முதுநிலை இடைநிலைப் பள்ளி (Sunshine Senior Secondary School) ஒன்றையும் நடத்தி வருகின்றார் என்று செய்தி- இவர்களுக்கு எங்கே சமச்சீர் கல்வியின் மீது அக்கறை பிறக்கும்.
இது ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே நடத்தும் பள்ளி. இதுபோல குடும்பத்தின் மற்றவர்கள், கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட்டங்கள், மாவட்டங்கள், தமிழகம் முழுக்க எத்தனைப் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துகிறார்களோ, யாருக்கு வெளிச்சம்.
ஆக தன் குடும்பமும், தன் கட்சிக்காரர்களுமே இப்படிக் கல்வி வணிகம் செய்து வருவதனால்தான் கடந்த கால ஆட்சி இச்சமச்சீர் கல்வியில் தீவிரம் காட்டவில்லை. அத்துடன் இப்போதைய தமிழின விரோத ஆட்சியாளர்களுக்கும், கல்வி வணிகர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது.
வல்லுநர் குழுவும் வில்லங்க முடிவும்
1. தமிழக அரசு தலைமைச் செயலாளர் - தலைவர் 2. மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியன் - மாநிலப் பிரதிநிதி 3.சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல் வரும் சென்னை சேவா சதன் பள்ளியின் ஆலோசகரும் ஆன விஜயலட்சுமி சீனுவாசன் - மாநிலப் பிரதிநிதி 4.சென்னை கோபாலபுரம் டி.ஏ.பி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் சி. ஜெயதேவ் - கல்வியாளர் பிரதிநிதி 5.சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிகள் குழுமத்தின் முதல்வர் மற்றும் இயக்குநர் திருமதி.ஒய். ஜி. பார்த்தசாரதி - கல்வியாளர் பிரதிநிதி 6. தில்லியைச் சேர்ந்த கணித மற்றும் அறிவியல் துறைப் பேராசிரியர் பி.கே. திரிபாதி.- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பிரதிநிதி 7. சமூக அறிவியல் துறைப் பேராசியர் அனில் சேத்தி - இதே நிறுவனத்தின் மற்றொரு பிரதிநிதி, 8 பள்ளிக்கல்வித்துறை- அரசு செயலாளர் உறுப்பினர்9. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் -உறுப்பினர் செயலாளர்
தமிழக அரசு நியமித்த இந்த வல்லுநர் குழு பலரும் அஞ்சியபடியே சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்திற்கு எதிராகத் தன் பரிந்துரைகளை வழங்கியுள்ளதுடன் சமச்சீர் கல்விக்கே எதிராகவும் சில கருத்துகளை வழங்கியுள்ளது. இக்குழுவிடம் இதனைத் தாண்டி வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. காரணம் இக்குழுவில் கல்வியாளர்கள் என்கிற தகுதிப்பாட்டுடன் எவரும் இல்லை.
எல்லாம் அதிகாரிகள், கல்வி வணிகர்கள், நிர்வாகிகள். இவர்களுக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. இந்தக் குழுவை நியமனம் செய்து அரசு அறிவித்தபோதே இது வல்லுனர் குழு அல்ல, வணிகர் குழு என நீதிமன்றத்தில் முறையிட்டு இதற்குத் தடை வாங்கியிருக்க வேண்டும். வாங்காததன் விளைவு இது தன் வேலையைக் காட்டியுள்ளது.
தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 93 விழுக்காடு. தமிழகத்தில் கல்விபயிலும் மொத்த மாணவர்களில் 79 விழுக்காட்டினர் மாநில அரசு கல்வி வாரியப் பாடத் திட்டத்தின் படி பயில்பவர்கள். எனினும் இந்த பள்ளிகளை, மாணவர்களை பேராளுமைப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இக்குழுவில் நியமிக்கப் படவில்லை. அப்படி இருக்க இப்பள்ளிகளின் மாணவர்களுக்கான நியாயம் அந்தக் குழுவிடமிருந்து எப்படிக் கிடைக்கும்.
இந்தப் பின்னணியில்தான், இந்த வல்லுநர் குழு அறிக்கை பாரபட்சமானது. சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு அநீதி இழைப்பது எனக் கூறி, இச்சிக்கலில் தனது கருத்துகளையும் தெரிவிக்க வாய்ப்பளிக்கக் கோரி கல்வியாளர் ச.சீ. ராஜகோபால் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சமச்சீர்க கல்வி கடந்து வந்த பாதை
08.09.2006: சமூகநீதியை நிலை நாட்டும் நோக்கில் தரமான சமத்துவக் கல்வியை வழங்கும் வகையில் தமிழக அரசு முனைவர் முத்துக்குமரன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை நியமிக்கிறது.
04.07.2007: 109 பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை முத்துக்குமரன் குழு அளிக்கிறது.
22.10.2007: சமச்சீர் கல்வி அறிக்கையை தமிழக அரசு சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கிறது.
30.11.2009: சமச்சீர் கல்வியை ஒன்று மற்றும் 6 ஆம் வகுப்புகளிலும் 2011-12 கல்வி ஆண்டில் 2 முதல் 5 மற்றும் 7 முதல் 10 வகுப்பு களும் செயலாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கபடுகிறது.
01.02.2010: இந்த அவசரச் சட்டம் பின் சட்டமன்றத்தில் சட்டமாக்கப்பட்டபிறகு ஆளுநரின் ஒப்புதலும் பெறப்படுகிறது.
30.04.2010: இந்த சட்டத்தை எதிர்த்து சிலர் சென்னை உயர் நீதிமன்றம் போக, அது இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
01.06.2011: 2010-11 கல்வி ஆண்டில் முதல் மற்றும் 6ஆம் வகுப்பில் சமச்சீர் கல்வித்திட்டம் செயலாக்கப்படுகிறது.
10.09.2010: சமச்சீர்கல்வி எதிர்ப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்ய, உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு சரியானதே அதில் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்தது.
22.05.2011: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற ஜெ. ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சமச்சீர்கல்விப் பாடத்திட்டம் தரமானதாக இல்லை எனக்கூறி அதன் செயலாக்தை நிறுத்திவைக்க அறிவிக்கிறது.
07.06.2011: இது தொடர்பாக தமிழக சட்ட மன்றத்தில் சமச்சீர் கல்விச் சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து அந்த அறிவிப்பைச் சட்டமாக்குகிறது.
10.06.2011: இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து சமர்சீர் கல்வி ஆதரவளார்கள் உயர்நீதிமன்றம் போக உயர்நீதிமன்றம் நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், டி.எஸ். சிவஞானம் ஆகிய இருவர் அடங்கிய ஆயம் தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை தடுத்து நிறுத்துகிறது.
14.06.2011: உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சௌகான் மற்றும் சுந்திரகுரு ஆகிய இருவர் அடங்கிய கோடை விடுமுறைக்கால ஆயம் கட்டுரையில் கண்டுள்ளவாறு வல்லுநர் குழு அமைக்க உத்தரவிடுகிறது.
29.06.2011 : வல்லுநர் குழு சமச்சீர் கல்வி தரமற்றது என அறிக்கை தருகிறது.
[குறிப்பு : எஞ்சிய செய்திகள் அடுத்த இதழில் இடம் பெறும்.]
சமச்சீர் கல்வியும் பணியாளர்களும்
அ.தி.மு.க. அரசு இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கைவிட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள கல்விளார்கள், உணர்வாளர்கள், மாணவர் அமைப்புகள் எனப் பல பிரிவினரும் பல போராட்டங்கள் நடத்தினர். என்றாலும் இத்திட்டத்தோடு நேரடித் தொடர்புடைய ஆசிரியர் சங்கங்ள் மட்டும் அரசின் முடிவை எதிர்த்து எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. ஒருசில சங்கங்களின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டதோடு சரி வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளலில்லை என்பதோடு மட்டுமல்ல, தாள் கிழிக்கும் பணியிலும், ஒட்டும் பணியிலும் முழுமையகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
ஏன் ஆசிரியர் சங்கங்கள் இதை எதிர்த்து போராடக்கூடாதா, அவர்களுக்கு சமச்சீர் கல்வியில், மாணவர் நலனில் அக்கறை கிடையாதா, வெறும் ஊதிய உயர்வு. அக விலைப்படி உயர்வுகளுக் காகப் போராடுவது மட்டும் தான் அவர்கள் வேலையா இதுபோன்ற பிரச்சனைகளிலெல்லாம் அவர்களுக்கு அக்கறை கிடையாதா, இதில் அவர்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாதா.
70கள் 80கள் வாக்கில் ஆசிரியர்கள் ஊதியம் குறைவாகப் பெற்று வந்த காலத்தில் அவர்களிடம் ஒரு போர்க்குணம் இருந்தது. பொதுவான கல்விக் கோரிக்கைகளுக்காவும் அவர்கள் போராடி னார்கள். ஆனால் இப்போதோ ஒப்பு நோக்கில் நிறைவான சம்பளம். இதனால் போர்க்குணம், போராட்ட உணர்வு என்பது மங்கிப்போய் தன்னலமே இலக்காய் தற்குறியாக மாறிப் போயிருக்கிறார்கள். இழப்பதற்கு எதுவுமில்லாத மக்கள் பிரிவினர்தானே போராடுவார்கள் இவர்களிடம்தான் இழப்பதற்கு ஏராளமாய் இருக்கிறதே, எப்படிப் போராடுவார்கள்.
சரி,அமைப்புகள்தான் அப்படி இருக்கின்றன. அரசியல் கட்சி கள் பலவும் அவரவர் சக்திக்கேற்ப ஆசிரிய அரசு ஊழியர் மற்றும் தொழிற்சங்கங்களில் தங்களுக்கு ஆதரவு சக்திகளையோ அல்லது நேரடியாக சங்கங்களையோ வைத்திருக்கின்றனவே. இந்த சங்கங்களைப் போராட வைத்திருக்ககூடாதா. அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் யாரும் அரசு தமிழ்ப்பள்ளிகளில் படிக்கவில்லையா, அவர்களுக்கு சமச்சீர்கல்வி வேண்டாமா இது பற்றியெல்லாம் தொழிற்சங்களுக்கு அக்கறையில்லையா...?
தொழிற்சங்கங்களுக்குத் தேவைப் படுவதெல்லாம் சந்தா. போனஸ், பஞ்சப்படி உயர்வில் விழுக்காடு வசூல், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்தல், வாக்களித்தல் நன்கொடை வசூலித்துக் கொடுத்தல் இவ்வளவுதானா? இதைத் தாண்டி சமூக நீதிக்கான அக்கறை அவர்களுக்குக் கிடையாதா வேண்டாமா. இது பற்றி ஆசிரிய அரசு ஊழிய அமைப்புகள். தொழிற்சங்கள் சிந்திக்கவேண்டும்.
கடைசி கட்டத்திலாவது சில ஆசிரிய அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் மகிழ்ச்சி.போராட்டம் நடத்திய அமைப்புகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
குறிப்பு: சமச்சீர் கல்வியை அதன் போக்கில் நிறைவேற விட்டிருந்தால் அது பாட்டிற்கு சத்தமில்லாமல் நிறைவேறி யிருக்கும். அதன் மகத்துவமும் சிறப்பும் மக்களுக்கு அதிகம் தெரியாமலே போயிருந் திருக்கும் ஆனால் இது சர்ச்சைக்குள்ளர்க் கப்பட்டதில் நாடு முழுவதும் இது சார்ந்த விழிப்புணர்சசி ஏற்பட்டு சமச்சீர் கல்வி பற்றி மக்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் இதற்கு பேருதவி செய்த தமிழக முதல்வா ஜெ.வுக்கு நன்றி.
பாடபுத்தகங்களில் அற்ப அரசியல்
இந்த ஆண்டு சமச்சீர் கல்விக்கான பாடபுத்தங்களில் 6ஆம் வகுப்புக்கான சமூக அறிவியலில். தமிழகம் கருணாநிதியின் தலைமையில் சீரும் சிறப்புமாக முன்னேற்றம் பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
நான்காம் வகுப்பு பாட புத்தக்கத்தில் அரைபக்கம் சென்னை சங்கமம் பற்றிப் பாராட்டி, தற்போது சிறைப்பட்டிருக்கும் கனிமொழி பற்றியும் சிலாகிக்கப்பட்டுள்ளதாம்.எல்லா வகுப்பு பாட புத்தங்களிலுமே செம்மொழிபற்றி கருணாநிதி இயற்றிய பாடல் இடம் பெற்றுள்ளதாம்.
இதுவன்றி சூரியன் பற்ற¤மாணவர்களுக்கு சொல்லித் தரும்படம் உதயசூரியன் தேர்தல் சின்னம் போல் இருப்பது, படங்களுக்கு கருப்பு சிவப்பு வண்ணம் தீட்டுவது என்பது போன்ற நடவடிக்கைகள் தனி.
பாடபுத்தங்களிலெல்லாம் இப்படிப் பிரச்சாரம் செய்து கட்சியை வளர்த்து விட முடியுமா ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா அது நிலைக்குமா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் விளம்பரப்பிரியர்கள் எந்த அளவுக்கு கேவலமாக அற்பத்திலும் அற்பமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டும் ஆகும் இது...
No comments:
Post a Comment