மனித இனத்தின் பரிணாமத்திற்கு முந் தைய உயிரினங்களின் இயற்கைத் தேர்வு காரணம். மனித சமூக வளர்ச்சிக்கு, அனுப வத் தேடலும் அறிவுச் சேகரிப்பும் காரணம். அந்த அறிவுச் சேகரிப்பில் நிகழ்ந்த மிக முக் கியமான ஒரு பரிணாம வளர்ச்சிதான் புத் தகம்.
புத்தகம் என்பது காகிதத் தயாரிப்புத் தொழில் நுட்பமும், அச்சு எந்திரத்தின் பயன் பாடும் இணைந்த ஒன்று மட்டுமே அல்ல. அது புத்தகத்தை எழுதியவருக்கும் வாசிப்ப வருக்கும் இடையே ஒரு அந்தரங்க உறவை உருவாக்குகிறது. புத்தகத்தின் லட்சியம், வெளிப்பாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப் படையில் அது இந்த இருவருக்கு இடையே யான உறவாக மட்டும் சுருங்கிவிடுவதில்லை. சமுதாயம் பற்றி அலசுகிறபோது, சமுதாயத் தில் பங்காற்றுகிறபோது அது சமுதாய மாற் றத்திற்கான கருவியாகவும் செயல்படுகிறது.
மனிதர்கள் தாங்கள் பார்த்ததையும், புரிந்துகொண்டதையும் சகமனிதர்களுக்கு பகிர்ந்துகொள்கிற மகத்தான தகவல் தொடர்பு என்ற மானுடச் செயல்பாடாக, குகைப் பாறைகளில் கற்களால் செதுக்கிய சித்திரங்களாக பதிவு செய்தனர். அடுத் தடுத்த தலைமுறை வளர்ச்சியில், ஒலிக் குறிகள் ஒருங்கிணைந்த சொற்களும், அந்த சொற்களின் சேர்க்கையில் வாக்கியங்களும் உருவாவதற்கு அந்தப் பாறைச் சித்திரங்கள் தான் அடிப்படையாக அமைந்தன. வாழ்க் கைக்கான போராட்டங்கள், வாழ்க்கையோடு இணைந்த ரசனைகள், வாழ்க்கையை மாற் றும் லட்சியங்கள் ஆகியவை பரிமாறப் பட்டன, பகிர்ந்துகொள்ளப்பட்டன. உண்மை நிகழ்வுகள் பற்றிய உணர்வுகளோடு, எதிர் பார்ப்புகள் இணைந்த கற்பனைகளும் கலந் திட, அங்கே கதை பிறந்தது, கவிதை பிறந் தது, காவியம் பிறந்தது, வரலாறு பிறந்தது. இவற்றையெல்லாம் சிந்தாமல் சிதராமல் சேகரித்துத் தருகிற அட்சயப் பாத்திரமாய் அவதரித்தது புத்தகம்.
“வாழ்வதற்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது என்று சொல்கிறவர் யாரோ அவர் எந்த ஒரு புத்தகத்தையும் படித்திராத வர்.” -இது புத்தகம் வாசிப்பின் அருமை குறித்துப் பேசிய ஒருவர் எடுத்துக் காட்டிய ஒரு மேற்கோள். ஆம், புத்தக வாசிப்பின் பெருமையை ஒருவர் எவ்வளவுதான் எடுத் துச் சொன்னாலும், தானே விரும்பி புத்த கத்தை எடுத்து வாசிக்கிறபோதுதான் உணர முடியும். புத்தகங்கள் வாசிக்க வாசிக்க வாழ்க் கையின் பல புதிர்கள் கட்டவிழும். மேலும் மேலும் புதிர்களை உடைப்பதற்கான உளியா கக் கேள்விகள் அணிவகுக்கும். அந்தக் கேள்விகளுக்கான பதில்களும் புத்தகங்களி லிருந்தே கிடைக்கும். ஒரு கட்டத்தில் புத்தக வாசிப்பாளர்களிடமிருந்தே புதிய புத்தகங்கள் கிடைக்கும்.
எல்லாப் புத்தகங்களும் சமுதாய மாற்றத் திற்கு உதவிவிடுவதில்லைதான். பிற்போக் குத்தனமான புத்தகங்கள், வரலாற்றைத் திரித்துச் சொல்லும் புத்தகங்கள் சமுதாயத் தைப் பழங்காலத்திற்குப் பின்னால் திருப்ப முயல்கின்றன. இன்றைய உலகமய, தாராள மய, தனியார்மய யுகத்தின் நவீனச் சுரண்டல் முறைகளை நியாயப்படுத்துகிற புத்தகங்கள் சமுதாயத்தை அப்படியே வைத்துக்கொள்ள முயல்கின்றன. உண்மைகளை உரக்கப்பேசி, மாற்று வழிகளையும் திறந்துவிடுகிற புத்த கங்களோ இப்படிப்பட்ட பின்னுக்கிழுக்கும் புத்தகங்களையும், அப்படியே வைத்திருக்க முயலும் புத்தகங்களையும் மீறி, சமுதாய மாற்றத்திற்கும் முன்னேறிச் செல்வதற்கும் வழிவகுப்பதாக வந்துகொண்டிருக்கின்றன. எந்தப் புத்தகம் எந்த வேலையைச் செய்கிறது என்பதைக் கண்டுணர்கிற பொறுப்பு, படைப் பாளியைப் போலவே படிப்பாளிக்கும் வந்து விடுகிறது.
“இப்போதெல்லாம் முன்போல் புத்தகம் படிக்கிற தலைமுறையையே பார்க்க முடிவ தில்லை. எப்போது பார்த்தாலும் டிவி, இன் டெர்நெட் என்று பொழுதைக்கழிக்கிறவர் களாகத்தான் இருக்கிறார்கள்,” என்று பொதுவாக இளந்தலைமுறையினர் பற்றிய
குற்றச்சாட்டுகளை சிலர் வீசுகிறார்கள். இதிலே ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது. எனது அன்றாட ரயில் பயணத் தில், இரவு நேரத்தில் பணி முடித்து வீடு திரும்புகிறபோது, உடன் வருகிற சிலர், சென் னையின் பெரிய நிறுவனங்களில் பணிபுரி கிறவர்கள், தங்கள் மடிகளில் மடிக்கணினி களை வைத்துக்கொண்டு ‘பைட்’ ‘ஜீபி’ ‘ரேம்’ என்று கணினிமொழியிலேயே பேசிக் கொண்டு வருகிறார்கள். ‘இன்வெஸ்ட் மென்ட்’ ‘ஷேர்’ ‘செபி’ ‘டிவிடண்ட்’ போன்ற சொற்களும் காதில் விழுகின்றன. இவற்றைத் தாண்டி சமுதாயம் பற்றியோ, அரசியல் பற்றியோ - ஏன் திரைப்படங்கள் பற்றிக்கூட - அவர்கள் பேசிக்கொள்வ தில்லை. சில நேரங்களில் அவர்களைப் பார்க்கிறபோது, உங்கள் இளம் வயதுக்கே உரிய காதல் விவகாரங்கள் இருக்குமே, அதைப் பற்றியாவது பேசுங்களேன் என்று கேட்கலாம் போல இருக்கும். தேர்தல் முடிவு கள் எப்படி இருக்கும், அன்னா ஹசாரே போராட்டம் சரிதானா, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு எவ்வாறு முடியும் என்றெல்லாம் பேசி பொழுதை வீணாக்க விரும்பாதவர்களாக தொடர்ந்து அவர்கள் கணினி தொடர் பாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். தட்டிக்கேட்காத, சுட்டிக்காட்டாத, குத்திக் காட்டாத இப்படிப்பட்ட நவீன அடிமை களைதான் இன்றைய கார்ப்பரேட் வர்க்கம் விரும்புகிறது, இப்படிப்பட்டவர்களைதான் வார்க்கிறது.
இப்படி தங்களது மூளையும் சேர்ந்து ஒடுக்கப்படுவதை எதிர்க்க முடியாதவர் களாக இவர்கள் மடிக்கணிகளுக்குள் சுகமா கச் சுருண்டுகொள்வதற்குக் காரணம் -= இவர்களிடையே புத்தக வாசிப்பு பண்பாடு வேரூன்றாததுதான் என்று அடித்துச் சொல் லலாம். சமுதாய அக்கறை உள்ளவர்கள் அனைவரும் இப்படிப்பட்ட தலைமுறைகள் பிளாஸ்டிக் மோல்டிங் தயாரிப்புகள் போல இறக்கிவிடப்படுவது குறித்து கவலை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.
இன்னொரு பக்கத்தில், இன்றைய தலை முறைகள் எல்லோருமே புத்தகங்களை ஒதுக்கி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முழுமையாக ஏற்பதற்கு இல்லை. பதிப்பாளர் கள் பலரும் சுட்டிக்காட்டுவது போல, அவர வர் ஆர்வம் சார்ந்த, அவரவர் ஈடுபாடுச் சார்ந்த புத்தகங்களை அவர்கள் தேர்ந் தெடுத்துப் படிக்கவே செய்கிறார்கள். ஊழல் களுக்கு எதிராக ஆவேச உணர்வு வளர்ந் திருக்கிறது என்றால், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வெளிப் படுத்தியதுபோல் கணிசமான இளைஞர் களுக்கு அரசியல் பங்கேற்பு குறித்த அக் கறை ஏற்பட்டிருக்கிறது என்றால் - அதற்கு இதர பல காரணங்களோடு, அவர்களது புத் தக வாசிப்பிற்கும் தலையாயதொரு பங்கு உண்டு.
இந்த ஆக்கப்பூர்வமான போக்கை வளர்ப் பதற்கு அரசும், மக்கள் இயக்கங்களும் என்ன செய்யப் போகின்றன? புத்தக தயாரிப்பை பொருளாதார ரீதியாக ஒரு பெரும் சவாலாக மாற்றியிருக்கிற காகித விலை உயர்வைக் கட்டுப்படுத்த அடுத்துவதும் அரசு அக்கறை மிகுந்த நடவடிக்கைகளை எடுத்தாக வேண் டும். கிராமங்கள்தோறும் பெயருக்குக் கட்டப் பட்டு மூடியே கிடக்கிற நூலகங்களின் கதவுப் பூட்டுகள் உடைக்கப்பட்டாக வேண்டும். நகரங்களின் நூலகங்களுக்கு, பாகுபாடின்றி அனைத்துப் புத்தகங்களும் வந்து சேர வேண்டும். தேர்ந்தெடுத்துப் படிக்கிற உரிமை வாசகர்களுக்கு உறுதிப்பட வேண்டும்.
புத்தக ஈடுபட்டை ஊக்குவிப்பதில்லை. நிச்சயமாக பதிப்பகங்களுக்கும் விற்பனையா ளர்களுக்கும் பங்கிருக்கிறது. பாரதி புத்தக லாயம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை யொட்டி ரூ.750 மதிப்புள்ள புத்தகங்களை ரூ.500 செலுத்திப் பெற்றுக்கொள்ளும் திட் டத்தையும், புத்தகங்களுக்கு 50 விழுக்காடு விலைச் சலுகையையும் அறிவித்துள்ளது. சமூக அக்கறையுள்ள மற்ற பதிப்பகங்களும் இப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முன் வந்திருக்கக்கூடும்.
“அமைதியான ஆனால் நிச்சயமாக உடன்வரும் நண்பர்கள் புத்தகங்களே. எளி தில் நெருங்கக்கூடிய, நம்பகமான ஆலோ சகர்கள் புத்தகங்களே. மிகுந்த பொறுமை வாய்ந்த ஆசிரியர்கள் புத்தகங்களே.” - சார்லஸ் எலியட் கூறிய இந்த கருத்து எவ்வ ளவு உண்மையானது என்பதை புத்தகச் சோலைக்குள் நுழைந்து வருகிறவர்கள் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இடர்ப் பாடுகள், சவால்கள், சோதனைகள் பலவற் றையும் எதிர்கொண்டு இந்த நண்பர்களும் ஆலோசகர்களும் ஆசிரியர்களும் நம் இல்லங்களுக்கு மனமுவந்து வரத்தயாராக இருக்கிறார்கள். அவர்களை வரவேற்க வாசற் கதவுகளை விரியத் திறந்து வைப்போம்.
அ.குமரேசன்
No comments:
Post a Comment