Monday, 2 June 2014

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை அரசு பள்ளிகளால்தான் உருவாக்க முடியும்: கல்வியாளர்கள் கருத்து

நாள்: ஜூன்,2,2014
சென்னை:

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதா யத்தை அரசுப் பள்ளிகளால்தான் உருவாக்க முடியும் என்று கல்வியா ளர் எஸ். எஸ். ராஜகோபால் கூறி யுள்ளார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான பிரச்சார நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த பிரச்சாரத்தை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வே.வசந்திதேவி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்வியாளர் எஸ். எஸ்.ராஜ கோபால் பேசியதாவது: தனியார் நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சிட்டிபாபு தலைமையிலான குழுவை அமைத்தது. அந்தக் குழு தங்கள் அறிக்கையில், தனியார் பள்ளிகள் தரமற்ற கல்வி வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. அங்குள்ள 70 சதவீத ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி பெறாதவர்கள். அதேசமயம் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் அமைய அரசுப்பள்ளிகள் மட்டுமே உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மனோன்மணீயம் சுந்த ரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி பேசிய தாவது: மேற்கத்திய நாடுகளில் இன்றைக்கும் கல்வி என்பது அரசிடம்தான் உள்ளது. அரசு பள்ளிகளில்தான் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு திடல், தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் விளையாட்டு திடல் மற்றும் தகுதியான ஆசிரியர் இல்லாமல் உள்ளனர்.

பொதுப் பள்ளிகளில் மக்கள் மாணவர்களை சேர்ப்பதற்கு முன் உதாரணமாக அரசு அதிகாரிகள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். தகுதி இல்லாத தனியார் பள்ளிகளை அரசு மூடவேண்டும். மக்களின் வரிப்பணம் அரசுப் பள்ளிகளில் முறையாக பயன்படுத்தபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநில தலைவர் மணி பேசுகை யில், “அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண் டும். அரசின் வாய்ப்புகளை பயன்படுத்தி பொது பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்டம், தாய்மொழி வழி கல்வி ஆகியவற்றை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதியில் இருந்து மாநிலத்தில் நான்கு பகுதிகளில் இருந்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பிரச்சாரங்கள் செப்டம்பர் 5 ம் தேதி அன்று நிறைவு பெறும்” என்றார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந் திரபாபு பேசுகையில், “தனியார் நிறுவனங்கள் அடிப்படை உரிமையான கல்வியை வியா பாரம் செய்து வருகின்றன. மதிப்பெண் களை மட்டும் நோக்கி செல்லும் இயந்திரங்களாக மாணவர் களை நடத்துகின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இல்லாதவர்களாக செய்கின்றது.

அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் ஒன்றுசேர்ந்து படிக்கும் பொதுப் பள்ளிகளில் தான் மாணவர்களின் திறமையை வளர்க்க முடியும். அரசு நடத்துகின்ற பொதுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்களை சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

நன்றி: தி தமிழ் இந்து

No comments:

Post a Comment