பதிவு செய்த நேரம்:2014-06-02 10:19:02
சென்னை, : அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் மணி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி, பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர். இதுகுறித்து முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறியதாவது:
பத்தாம் வகுப்பு தேர்வில் மெட்ரிக் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் 2,700. ஆனால், 70 மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி பெறாதவர்கள் 700. அதேபோன்று மதிப்பெண் பெறுவதிலும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை மிஞ்சி உள்ளனர். எனவே பொதுமக்கள் இதை உணர்ந்து, சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் தங்கள் குழந்தைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றார்.
ஆதாரம்: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=325412&cat=504
No comments:
Post a Comment