Saturday, 7 June 2014

கட்டாய கல்வி உரிமை எப்போது? : ப.ஆறுமுகம்

“இது பிரிட்டிஷ் அரசுக்கு அவ மானகரமான விஷயம்; இந்தியாவில் இன்னமும் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தபடவில்லை. இந்தியா வில் ஏழு குழந்தைகளில் ஐந்து குழந்தை கள் பள்ளிக்குச் செல்லவில்லை.இங் குள்ள 5 கிராமங்களில் 4 கிராமங்களில் பள்ளிக்கூடமே இல்லை ஆகவே தொடக்கக் கல்வியை நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வியாக்குவதற்கு சட்டம் கொண்டுவரவேண்டும்” என1910 -ம் ஆண்டிலேயே குரல் எழுப்பி யவர் கோகலே. எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டுமென 1937ல் மகாத்மா காந்தி கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்து அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோதுசட்டம் அமலுக்கு வந்த பத்து வருடத்திற்குள் 14 வயதுமிகாமல் இருக்கும் அனைத்து குழந்தை களுக்கும் கட்டாயக் கல்வி மற் றும் இலவச கல்வியினை அரசு வழங்கிட வேண்டுமென இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 45 கூறுகிறது.

“அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் அடிப்படையாக கொண்டுள்ள ஒரு உலகத்தில் கல்வி தான் மக்களின் செல்வத்தையும் பாதுகாப்பையும் தீர்மானிக்கிறது.பள்ளி யிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் வரும் மாணவர்களின் தரம் மற்றும் எண்ணிக்கை என்பது நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்ற நோக்கத்துடன் செய்யப்படும் நமது தேசிய மறுக் கட்டமைப்பு என்ற மகத்தான செயல் பாட்டின் வெற்றியைபொறுத்துதான் உள்ளது” கோத்தாரி கமிஷன்.தேசிய கல்விக் கொள்கை நோக்கமாக இதனை குறிப்பிட்டது.கல்வி தீவிரமாக மாற்றியமைக்கப்பட வேண்டும், நாட்டின் பொருளாதார, கலாச்சார மேம்பாட்டிற்கு இது மிகவும் அவசியம். நாட்டில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும், ஒருசோஷலிச சமூகத்தை நிர்மாணிக்கவும் கல்விமுறையில் புரட்சிகரமாற்றம் அவசியம். 1992ம் ஆண்டு மோஹினிஜெயின் வழக்கில் உச்சநீதிமன்றம் கல்வி ஓர் அடிப்படை உரிமை என்று கூறியது.

1993 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் வழக்கில் கல்விஅடிப்படைஉரிமைஎன்றும் அத னை இலவசமாக கொடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.சுதந்திர இந்தியாவில் கல்விகுறித்த சிந்தனைகளும், கல்விக் கான போராட்டங்களும், இடை விடாது தொடர்ந்ததன் விளைவாக, அரசியலமைப்பு சட்டம் உரு வாக்கப்பட்டு 52 வருடங்களுக்கு பிறகு, வாழ்வுரிமையின் பிரிக்கமுடியாத அம்சமாக கல்வியுரிமை உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்பு 86வது சட்டத் திருத்தம் 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளித்திட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை 2002ல் அறிவித்தது. ஏழு வருடங்களுக்கு பிறகு 2009ல் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற் றப்பட்டது. 1 ஏப்ரல் 2010 முதல் இச்சட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டு 4 வருடங்கள் கடந்த பின்பும் கட்டாயக் கல்விஉரிமைச் சட்டம் சட்டமாகவே உள்ளது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமை என்பதை சட்டம் ஏற்று கொண்டுள்ளது. அவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளது.*தனியார் பள்ளிகளில் 25 சத வீதம் பள்ளி அருகில் உள்ள சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஒதுக்கிட வேண்டும் அவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்தும்.*விதிக்கப்பட்ட தர வரைவுகளை (நாம்ஸ் அண்ட் ஸ்டேண்ட்ஸ்) நிறை வேற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் மறுக்கப்படும், ரத்து செய்யப்படும்.*குழந்தைகளைபள்ளியை விட்டு அனுப்புவதோ எட்டாம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் தக்க வைப் பதோ தடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் எளிமையாக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் சேராத குழந்தைகள் இடை விலகி விட்டகுழந்தைகள் மீண்டும் சேர்க்கப்படும் போது வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.* தனிப்பயிற்சி தடை செய்யப்படுகிறது.*ஆசிரியரின் பொறுப்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.கலைத் திட்டம், கற்பித்தல்முறைகள், குறித்து சிறந்த விதிமுறைகள் உரு வாக்கப்பட்டிருக்கின்றன.* இன்றுள்ள தேர்வு முறைக்கு மாற்றாக குழந்தைகளின் அறிவையும், அறிவை பயன்படுத்துவதையும், மதிப்பீடு செய்யும் முழுமையானதொடர் மதிப்பீடு முறை வலியுறுத்தப்படுகிறது.* தேர்வுகள்அளிக்கும் அச்சுறுத்தலும், சுமையும் தடுக்கப்படுகின்றன.* குழந்தைகளுக்கு உடல் ரீதி யான தண்டனைஅல்லது மனரீதி யான புண்படுத்துதல் தடை செய்யப்படு கிறது.

பள்ளி நிர்வாகம் அதிகாரிகள் கை யிலிருந்து எடுக்கப்பட்டு சமூதாயத்தின் பொறுப்புகளுக்கு மாற்றப்படுகிறது. மாணவர்களின் பெற்றோர்களிடம் கொடுக்கப்படுகிறது.என இச்சட்டம் பல்வேறு விஷயங் களை கொண்டதாக இருந்தாலும் இச்சட் டம் நமது எதிர்ப்பார்ப்பையும், நமது முன்மொழிவுகளையும் முழுமையாக உள்ளடக்கியதாக கொண்டு வரப்பட வில்லை. `கட்டாய இலவச கல்வி உரிமைசட்டம் 2009’ என்பது பெயர் , ஆனால் அனைவருக்கும் இலவச கல்வி என்பதை சட்டம் அறிவிக்கவில்லை. 18 வயது என்பது தான் ஐக்கியநாடுகளின் குழந்தை உரிமை சாசனம் கூறும் பள்ளிக் கல்வி உரிமை வயதாகும். ஆனால் இந்த சட்டம் 6 வயதுக்கு குறைவான குழந்தைகளை புறக்கணித்து விட்டு தான் வந்துள்ளது.கொடிக் கட்டிபறக்கும் கல்வி வியா பாரத்தை கட்டுப்படுத்திட கொள்கை ரீதியாக அரசு தலையிடாமல் சாத்திய மில்லை எனினும் அதற்கான மூக்காணங்கயிறாக இச்சட்டத்தை பயன்படுத்திட வேண்டும். 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என புள்ளிவிவரம் கூறுகிறது.

காரணம் வறுமை அல்லது பள்ளி இல்லாதகுறை, சாதிய புறக்கணிப்பே காரணங்களாக உள்ளன மேலும் பாடம் தேர்வு மதிப்பீட்டு முறைகளில் உள்ள குறைபாடுகளும் இடைவிலகலுக்கு ஆளாக்குகின்றன. இக்குறைகளை களைவதற்கு இச்சட்டம் சிறிய வாய்ப்பினை வழங்குகிறது. அதேபோல் அனைத்துவிதமானபாகுப்பாட்டையும் இச்சட்டம் தடைசெய்கிறது.ஆகவே இச்சட்டத்தில் பல்வேறு குறைகள் இருப்பினும் அவையெல்லாம் மீண்டும் திருத்தப்பட்டு முழுமையாக அமல்படுத்திட வேண்டும். இத்தனை வருட கல்வி உரிமை போராட்டத்தின் விளைச்சலாக நாம் இதனை கருத வேண்டும். இச்சட்டத்தினை முழு மையாக அமல்படுத்திட பரந்துப்பட்ட போராட்டத்தை நடத்துவதோடு அடுத்த கட்டப் போராட்டத்துக்கும் தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும்.தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் சட்டத்தின் முக்கிய அம்சங் களை நிறைவேற்றிட தொடர்ந்து கண் காணித்திடவேண்டும். அமல்படுத்திட மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது பார பட்சமின்றி உடனே நடவடிக்கை எடுத்திடவேண்டும். கல்வி வியாபரத்தை கட்டுப்படுத்திட வேண்டும்.

கட்டணக் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலித்திட நட வடிக்கை எடுத்திட வேண்டும் மீறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்திடவேண்டும்.இவையெல்லாம் இந்த சமூகத்திற்கு உடனடி தேவையாக இருக்குமே இன்றி நிரந்தர தீர்வாக ஒரு போதும் இருக்காது பொதுப் பள்ளி முறைமட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும்.கல்வி உரிமைச் சட்டத்தின் குறைபாடு களை களைந்து மத்திய-மாநில அரசு கள் முழுமையாக சட்டத்தினை நிறைவேற்றிட வேண்டும். ஆழமான விவாத மும், கல்வி குறித்த விழிப்புணர்வும் மக்கள்மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். கல்வியாளர்களும், சமூக சிந்தனை யாளர்களும் மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து இப்பணிகளை மேற் கொள்ள வேண்டும். கல்வி குறித்த மக்களின் பார்வை புரிதல் மாற்றப்பட வேண்டும் மாறும் போதுமாற்றம் என்பது நிச்சயம்.

கட்டுரையாளர் : இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர்
தீக்கதிர்

No comments:

Post a Comment