Wednesday, 4 June 2014

மினி மாராத்தான் போட்டி

பதிவு செய்த நாள்: 02ஜூன் 2014  23:01

கூடலூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, கூடலூரில் மினி மாராத்தான் போட்டி நடந்தது.
கூடலூரில் அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அக்னி சிறகுகள் பயிற்சி மையம், குரு டிரெயினிங் அகாடமி இணைந்து, மினி மாராத்தான் போட்டி நடத்தியது. அறிவியல் இயக்க மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் சுந்தர் துவக்கி வைத்தார். "அரசு பள்ளி நமது பள்ளி', "அரசு பள்ளி மக்கள் பள்ளி', "அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்போம்,' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் வீரர்கள் ஓடினர். கூடலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணி மண்டபம் வரை சென்று திரும்பினர். முதல்பரிசை பிரதீப், இரண்டாம் பரிசை ரீகன், மூன்றாம் பரிசை அமர்நாத் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணன், மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், கிளைத்தலைவர் மோகன், குரு அகாடமி நிர்வாக இயக்குனர் பிரபாகரன், அக்னி சிறகுகள் பயிற்சி மைய இயக்குனர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=989363&Print=1

No comments:

Post a Comment