Monday, 9 June 2014

நாமக்கல் பள்ளிகளின் நடைமுறைகள்: என்.பகத்சிங்

பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் எவ்வளவு மார்க் எடுப்பார்களோ? அவர்களை எந்தப்பள்ளியில் பிளஸ் 2 சேர்க்க போகிறோ மோ? என கணக்குகள் போட்ட படியேஇருப்பர் பெற்றோர். சமீபத்தில் வெளியான பிளஸ் 2 முடிவுகளை ஒப்பிடும் போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு களும் 90 விழுக்காடுகளுக்கு மேல் தேர்ச்சியிருக்குமென ஊகிக்க முடிகிறது. பெற்றோர்களைப் போலவே இந்த முடிவு களை எதிர்பார்த்து நாமக்கல் வாழ் கல்விச்சேவகர்களும், தங்களின் கல்லாவை கணிசமாக நிரப்ப தயாராகி வருகிறார்கள்.

முன்பெல்லாம் நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணைகளுக்கும், லாரி களுக்கு பாடி கட்டுவதிலும் பெயர் பெற்றமாவட்டமாக இருந்தது. கடந்த பத்தாண்டு களாக பிளஸ் 2 எனும் கல்வி சேவையை மட்டும் மையமாகக் கொண்டு செயல் படும் பள்ளிகள் புற்றீசல்கள் போல பெருகியுள்ள மாவட்டமாக மாறியுள்ளது. கோழிப்பண்ணை நடத்தியவர்களும், லாரி கட்டிகொடுத்தவர்களும் அந்தத் தொழிலை சுருக்கி உபதொழிலாக மாற்றிக் கொண்டு,முக்கிய தொழிலாக இதுபோன்ற பள்ளி களை நடத்துவதாக சொல்லப்படுகிறது. காரணம் அபரிமிதமான லாபந்தான்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிள்ளைகளை இங்கு கொண்டுவந்து கொட்டுகிறார்கள் பெற்றோர்கள். பிளஸ் 2வுக்கு இரண்டரை லட்சம் துவங்கி 10லட்சம் வரை வசூலிக்கும் பள்ளிகள் இங்கு ஏராளம். சில மாதங்களுக்கு முன் ஒரு பள்ளியில் வருமான வரித்துறை நடத் திய சோதனையில் ஒரே சமயத்தில் ரூ.44 கோடி பிடிபட்டது என்பதை வைத்தே இந்த வசூல் வேட்டையின் பிரம்மாண்டம் நமக்கு பிடிபடும்.இப்படி பணக்காரர்களும், பணக் காரர்களாக தங்களை பாவித்துக் கொள் ளும், நடுத்தர வர்க்கமும் லட்ச லட்சமாக கொண்டுவந்து கொட்ட அதை வாங்கி தங்கள் கல்லாவில் கொட்டிக் கொள்ளும் இந்தப் பள்ளிகள் பிள்ளைகளுக்கு கல்விபுகட்டும் முறைகள் நமக்கு வேதனை யளிப்பதாகவே உள்ளது. பாடங்களை வெறுமனே மனப்பாடம் செய்து, அடித்து, உதைத்து மார்க் மட்டுமே பெறும் மெஷின்களாக உற்பத்தி செய்கிறார்கள் பிள்ளை களை. புரிந்து படிக்கும் காலமெல்லாம் போயே போச்சு.மர்மதேசம்இந்தப் பள்ளிகளுக்குள் பிள்ளைகளை சேர்த்து விடுவதோடு பெற்றோர்களின் வேலை முடிந்து விடுகிறது. அதற்கு பிறகு அங்கு என்ன நடக்கிறதென எவருக்கும் தெரியாது.

யாரும் உள்ளே போக முடியாது. டிவி, செய்தித்தாள் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிள்ளைகள் வீட்டாருடன் போனில் பேசுவதும் அளவோடுதான் (சனிக்கிழமைகளில் பிளஸ் 1க்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பிளஸ் 2க்கு) வெளியே என்ன நடக்கிறது, வெளி உலகம் எப்படி இயங்குகிறதென எதுவும் தெரியாது இந்த இளங்குருத்துகளுக்கு.16, 17 வயதென்பது வெறுமனே புத்தகங்களை மட்டும் படிப்பதற்கான வயதல்ல, உற்சாகத்துடன் ஓடியாடி, விளை யாடி, நண்பர்களுடன் குதூகலமாக சிரித்து மகிழ வேண்டிய பருவம், ஆனால் இந்தப் பள்ளிகளில் விளையாடுவது, சிரிப்பது என்பதெல்லாம் கடுகளவும் கிடையாது. இப்படி முடக்கிப் போட்டு வெறும் புத்தகபுழுக்களாகப் பிள்ளைகளை மாற்றுவ தென்பது, மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மிக மோசமானமன உளைச்சல்களுக்குள் இவர்களைதள்ளுகிறது. எனவேதான் இப்பள்ளி களில் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் தொடர்கதையாகியுள்ளன. கடந்த கல்வியாண்டில் மட்டும் 11 மாணவர்கள் இந்தப் பள்ளிகளில் தற் கொலை செய்து கொண்டுள்ளனர்.வர்த்தகப் போட்டிநாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி களுக்குள் கடுமையான வர்த்தகப் போட்டிநிலவுவதால் கோடிக்கணக்கில் செலவழித்து பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளும் பெருமளவில் விளம்பரங்கள் செய்கிறார்கள். அடுத்தக்கட்டமாக மாநிலம் முழுக்க அரசு பள்ளிகளில் படித்துநல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை தேடிப் பிடித்து பலவிதமான கட்டணசலுகைகள் அளிப்பதாக வாக்குறுதி யளித்து அழைத்து வருகிறார்கள். கார ணம் பள்ளியின் முதலீடு வெறும் கட்டிடங்களும், வகுப்பறைகளும், பேருந்துகளும் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் அந்தப்பள்ளி பிளஸ் 2வில் என்ன ரிசல்ட் கொடுக்கிறார்கள் என்பதும்தான்.

எனவே தான் நன்றாகப் படிக்கும் மாணவர்களாக தேடிப்பிடித்து சேர்க்கிறார்கள். இதனால் நல்ல ரிசல்ட் வந்தால் அதை வைத்து அடுத்தாண்டு கல்விக்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாமென்ற வர்த்தக நோக்கம் பொதிந்த பள்ளிகளாகவே இவை காணப்படுகின்றன.கூட்டுக் கொள்ளைஇந்தப் பள்ளிகளின் கல்விக் கொள்ளை என்பது அவர்களின் லாவக மான நடவடிக்கைகளால் மட்டும் நடை பெறுவதல்ல. இதற்கு கல்வித்துறை முதல்காவல்துறை வரை மாநிலத்தின் பல் வேறு துறைகளின் ஆதரவும், சில அர சியல் கட்சிகளின் ஆசியும் உண்டு. எனவேதான் இப்பள்ளிகள் எந்த சட்டங் களையும் மதிப்பதே இல்லை.தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பாக சிங்காரவேலர் கமிட்டி 2013ல் மாவட்ட வாரியாக தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்துள்ளது.

நாமக்கல் மாவட் டத்திலுள்ள 151 தனியார் பள்ளிகளுக்கான கட்டண விகிதங்களை தமிழக அரசின் கல்வித்துறை இணையதளத்தில் பார்த்தோமானால் அதிர்ச்சி நமக்கு காத்திருக்கிறது. ரூ.21 ஆயிரம்தான் அதிக பட்சமாக ப்ளஸ் 2வுக்கு கட்டணமாக வசூலிக்க வேண்டுமென அரசு நிர்ணயித் துள்ளது. ஆனால் நாமக்கல் பள்ளிகள் ரூ.4.5லட்சம் வரை (கிட்டத்தட்ட 22 மடங்கு) வசூலிக்கின்றன. எதற்கும் பில்கிடையாது. செக்காகவோ, வங்கி வரை வோலையாக கூட கட்ட முடியாது. ரொக்கமாக மட்டுமே கட்டணம் செலுத்த முடி யும். மாவட்டம் முழுவதும் 151 பள்ளிகள், பள்ளிக்கு சராசரியாக 8 ஆயிரம் மாணவர்கள், ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 4.05 லட்சம் கட்டணம் இந்த எண்ணிக் கைகளை கூட்டி கழித்துப் பார்த்தால், கல்விக் கனவுகளுக்காக இங்கு புரளும் பணம் நம்மை மிரளவைக்கிறது. இந்தஏமாற்றுக்களையெல்லாம் யார் கண் காணிப்பது? யார் நடவடிக்கை எடுப்பது?சந்தேகமென்ன கல்வித் துறைதான். அப்பட்டமாக ஊரறிந்த ரக சியத்தை கண்டு கல்வித்துறை கைகட்டி வேடிக் கைப் பார்ப்பது மட்டுமல்லாமல், இப்பள்ளிகளுக்கு பரிபூர்ணசேவை அளித்து வருவதுதான் வேதனை.

பெற்றோர்கள் விரும்பித்தானே இங்கு பிள்ளைகளை சேர்க்கிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். உண்மைதான். தனியார் பள்ளிகள்தான் தரமான கல்வியைத் தர முடியுமென பெற்றோர்களின் மனங்களை தகவமைத்துள்ளன விளம்பரங் களும், ஊடகங்களும். இந்த நம்பிக்கைஉண்மையா? பொய்யா? என்பது கிடக் கட்டும். கல்வி என்பது நாகரிகத்தின் அடையாளம். ஆனால் இந்தப் பள்ளிகள்கல்வி கற்பிக்கிறோம் என்ற பெயரில் மாண வர்களையும், அவர்தம் பெற்றோர்களையும் நடத்தும் விதம் அநாகரிகத்தின் உச்சம்.ஒரு காட்டு யானையை சங்கிலி பிணைத்து கோயிலில் கட்டி வைத்து சில்லறை வாங்க பழக்கப்படுத்துவதைப் போல இரவும் பகலும் ஒரே அறையில் அடைத்து வைத்து எப்போதும் படி.... படி என்று வேலை வாங்கினால் நல்ல ரிசல்ட் வரத்தானே செய்யும்.கட்டுப்படுத்தும் நடவடிக்கை அவசியம்நிறைய மதிப்பெண் பெற்று, நல்ல வேலைக்கு செல்வது மட்டுமே, ஒரு மாணவனின் தகுதிக்கான அளவுகோல் அல்ல.

உலக இயல்பு தெரியாமல், விளையாடாமல், பேசி சிரிக்காமல் வெறுமனே படிக்க மட்டும் செய்யும் இவர்கள், நாளை கல்லூரிகளுக்கு செல்லும்போது அங்குள்ள சூழலை எதிர்கொள்ள சிரமப்படுவர். இந்தப் பள்ளிகளில் ஏற்படுத்தப் பட்ட ஆழ்மன பயம் அப்படியே பதிந்து புற உலகை எதிர்கொள்ள இயலாமல் தடுமாற வைக்கிறது. அல்லது கட்டவிழ்ந்த மாடு களைப் போல ஓடும்.சமூகத்தின் செயல்பாடுகள் புரியாமல் உருவாக்கப்படும் இந்த மாணவர்கள், படித்து மருத்துவர், பொறியாளர், அரசு அதிகாரிகள், பன்னாட்டு நிறுவன நிர்வாகிகள் என செல்லும்போது.... ஒரு பிரச்சனையின் பல்வேறு பரிமாணங் களையும் பார்க்காமல் வெறுமனே லாபநஷ்டக்கணக்குகளாக சுருக்கி மதிப் பிடுகின்றனர். உலகத்தை விசாலமாக பார்க்கும் சிந்தனை செறிவு அவர்களுக்கு இருப்பதில்லை. நவீன வகுப்பறை என்பது காலமாற்றங்களை உள்வாங்கியதாக இருக்க வேண்டும். இறுக்கமான வகுப்பறைகளை உருவாக்குவது எதிர்காலத் திற்கு பெரும் கேடு. இந்தப் பின்னணியில் நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு இறங்க வேண்டும். அவர்களின் வரம்பற்ற லாபவெறியிலிருந்து பெற் றோர்களையும், பிள்ளைகளையும் பாது காக்க வேண்டும்.

No comments:

Post a Comment