அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடங்கியுள்ளது. அண்மையில் வெளியான பத்தாம் பொதுதேர்வு முடிவுகளில் தனியார் பள்ளிகளை காட்டிலும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில் இயக்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர் நா.மணி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் பாகுபாடின்றி கல்விபெறக்கூடிய அரசு பள்ளிகளில் மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆதாரம் :http://tamilnewspaper.in/?p=10357
No comments:
Post a Comment