Wednesday, 4 June 2014

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அறிவியல் இயக்கம் பிரசாரம்

சென்னை, ஜூன். 3–
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூன் 03, 1:37 PM IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் சென்னையில் தொடங்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்தி தேவி பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த வருடம் 10–ம் வகுப்பு தேர்வில் திருநெல்வேலி மாவட்டம் பத்தரமடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.என்.பஷிராபானு 500–க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார்.

அதே போல பிளஸ்–2 தேர்வில் 5 அரசுப்பள்ளி மாணவர்கள் 200–க்கு 200 கட்–ஆப் மதிப்பெண் பெற்றுள்ளார். அரசு பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள் 185–க்கு மேல் கட்–ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவர்களில் இந்த சாதனையை பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, அரசு, மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதோடு அந்த பள்ளிகளை வலுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த பிரசார இயக்கத்தை தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சியில் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபால், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் மாடசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment