Thursday 22 May 2014

சமச்சீர் பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளதால் பள்ளிகளில் வெவ்வேறு கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும்





பதிவு செய்த நாள் : May 23 | 01:45 am
விருதுநகர்,

சமச்சீர் பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளதால் பள்ளிகளில் வெவ்வேறு கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்க விருதுநகர் மாவட்ட செயற் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரமசிவம் வர வேற்று பேசினார். இதை தொடர்ந்து டார்பின் பரிணாம கொள்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு நடந்தது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் இப்ராகீம், மாநில பிரசார குழு ஒருங்கி ணைப் பாளர் தியாகராஜன், மாநில செயலாளர் அமல் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெவ்வேறு கட்டணம்

கூட்டத்தில் வருகிற கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளில் மழலையர் கல்வி வழங்கப் படவில்லை என்பதால் மக்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்கின்றனர். எனவே இதனால் மழலையர் வகுப்பு களுக்கே அதிகளவில் பள்ளி கள் கட்டணம் வசூலிக்கும் நிலை உள்ளது. எனவே தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளை தொடங்கி ஏழை, எளிய குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை உத்தர வாதப்படுத்த வேண்டும்.

மாநிலம் முழுவதும் சமச்சீர் பாடத்திட்டமே நடைமுறை யில் இருப்பதால் வெவ்வேறு கட்டணங்கள் பள்ளிகளில் வசூலிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

தரமான கல்வி

அனைத்து பள்ளிகளிலும் தரமான வசதிகளை உத்தர வாதம் செய்து அனைத்து பகுதிகளிலும் பள்ளி கட்டணங்களை தமிழக அரசு நெறிப்படுத்த வேண்டும். ஓரே சீரான கட்டணத்தை நிர்ண யிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. அதன் காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டும் வருகின்றன. அரசு பள்ளிகள் மட்டுமே அனைவருக்கும் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை கொடுக்க முடியும். எனவே அரசு பள்ளிகளை பாதுகாக்கவும், பலப்படுத்த வும் மாவட்ட முழுவதும் பிரசார இயக்கம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் மாரியம்மாள் நன்றி கூறினார்.

நன்றி: தினத்தந்தி

No comments:

Post a Comment