Friday 19 September 2014

ஆசிரியர் தினப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பு

By கம்பம்,
First Published : 18 September 2014 12:29 AM IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்காக நடத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை, அந்த இயக்கம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்கான போட்டிகள், தேனி மாவட்ட அளவில் நடைபெற்றது. மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:

9-12 வகுப்பு மாணவர்களுக்கான என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில், சின்னமனூர் காயத்ரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி மு. கிருபமதிவதனி முதல் இடத்தையும், ஜி.கல்லுப்பட்டி புனித பீட்டர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். திவ்யதர்ஷினி இரண்டாம் இடத்தையும், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் அ. தீபக் ராஜ் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆசிரியர்களுக்கான போட்டியில், வகுப்பறையில் வசந்தம் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில், பழனிசெட்டிபட்டி ஆசிரியை கெ. மணிமாலா முதலிடத்தையும், கூடலூர் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் தெ. அழகேசன் இரண்டாமிடத்தையும், சீலையம்பட்டி பாரதி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை த.ச. பத்மாவதி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில், இப்படித்தான் இருக்கவேண்டும் வகுப்பறை என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியில், வீரபாண்டி தேனி கலை அறிவியல் கல்லூரி மாணவி ஈ. பாண்டீஸ்வரி முதலிடத்தையும், உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி மாணவி ரேவதி விஸ்வநாதன் இரண்டாமிடத்தையும், கருத்த ராவுத்தர் கல்லூரி மாணவி எ. அரபத் நிஷா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆர்வலர்களுக்கான போட்டியில், அரசுப் பள்ளிகள்: நேற்று இன்று நாளை என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில், ஆண்டிபட்டி ஜெ. எட்வர்டு இன்பராஜ் முதலிடமும், தேவாரம் இரா.வே. இளங்கோவன் இரண்டாமிடத்தையும், மொட்டனூத்து துரை. சுப்ரமணியன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் போட்டிகளில் பங்குபெற்ற அனைவருக்கும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலர் தே. சுந்தர், மாவட்டத் தலைவர் பா. செந்தில்குமரன், மாவட்டச் செயலர் வெங்கட்ராமன், மாவட்டப் பொருளாளர் மஹபூப் பீவி, மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணன் ஆகியோரின் சார்பில், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment