Sunday 1 June 2014

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்போம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பிரச்சாரம்

Published: June 1, 2014 11:57 ISTUpdated: June 1, 2014 11:57 IST

மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தென்சென்னை மாவட்டக் குழு ஞாயிற்றுகிழமை தொடங்குகிறது.

மாநகராட்சி, அரசுப் பள்ளி மாணவர்களிடையே தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது, அவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள் என்று கூறி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகி உதயன் கூறுகையில், “மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுகின்றனர். அது தவிர, பல போட்டிகளில் பங்கேற்று பன்முகத்தன்மைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். நமது வரிப்பணத்தில்தான் இந்தப் பள்ளிகள் இயங்குகின்றன. எனவே, இந்த பள்ளிகளில் படிப்பது என்பது நமது உரிமை. கட்டணம் கட்டி தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

ஒரு மாதம் நடக்கவிருக்கும் இப்பிரச்சாரத்தை தொடங்கி வைக்க திரைப்பட இயக்குநர் ராம், கல்வியாளர் வசந்தி தேவி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நன்றி: தமிழ் இந்து

No comments:

Post a Comment