Wednesday 4 June 2014

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது ஏன்?

பதிவு செய்த நாள்: 02ஜூன், 2014 23:04
சென்னை : 'அரசு, மாநகராட்சி பள்ளிகளை வலுப்படுத்தி, அவற்றில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' என, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நேற்று முன்தினம், தி.நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டது. தி.நகர் பகுதியில் நேற்று நடந்த பிரசாரத்தில் அந்த இயக்கம் முன்வைத்த முக்கிய விஷயங்கள்:
 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் தான் தரமான கல்வியை போதிக்கின்றன. அவை வாழ்வியலோடு இணைந்து, மாணவர்களின் கற்பனைத் திறனுக்கும் வாய்ப்பளிக்கின்றன

 அரசுப் பள்ளிகளில், சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், பஸ் பாஸ், மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்டவை இலவசமாக கிடைக் கின்றன

 அரசு பள்ளி மாணவர்கள், பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்கின்றனர். பாடத்திட்டங்களின் இணை செயல்பாடுகளான சாரண, சாரணியர் இயக்கம், தேசிய மாணவர் படை, தேசிய குழந்தைகள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று, தங்களின் பன்முக தன்மையை வெளிப்படுத்துகின்றனர். இந்த மாதிரியான நிகழ்வுகள் எவையும் தனியார் பள்ளிகளில் நடைபெறுவதில்லை.

 அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தகுதிஉடையவர்கள். ஆனால், தகுதியே இல்லாத பல ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு, குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய எந்த அக்கறையும் இருப்பதில்லை. அப்படிப்பட்ட பள்ளி களில் குழந்தைகளை சேர்ப்பதால், குழந்தைகளுக்குள் பிரிவினை எண்ணமும், அடிமைத் தனமும், சிந்திக்காத மனப்பாங்கும் பெருகி விடும். அதேநேரம், அனைவருக்கும், சமமான, தரமான, தாய்மொழிக் கல்வியை அரசே வழங்க வேண்டும். அரசு ஆரம்ப பள்ளிகளில், வகுப்புக்கு ஒரு ஆசியர், ஆசிரியருக்கு ஒரு வகுப்பு என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓவியம் உள்ளிட்ட கலை மற்றும் கைத் தொழில் வகுப்புகளையும், ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்

ஆதாரம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=989379&Print=1

No comments:

Post a Comment