Friday 14 February 2014

உலகிலேயே இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம் ஐநா தகவல்

பதிவு செய்த நாள் : Jan 29 | 01:47 pm

ஐக்கிய நாடுகள்

இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை 28.7 கோடியாக உள்ளது. இது உலக மக்கள் தொகையில் 37 சதவீதமாகும்.என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-2014 ஐ.நாவின் உலகம் கல்வி கண்காணிப்பு அறிக்கையில் இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை 1991 ல் 48 சதவீதமாக இருந்தது. 2006 ல் 63 சதவீதமாக இருந்தது.மக்கள் தொகை வளர்ச்சியில் மாற்றம் இருந்தாலும் கல்வி அறிவு இல்லாதவர்களின் சதவீதத்தில் மாற்றம் இல்லை.என கூறி உள்ளது.


மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவின் பணக்கார இளம் பெண் உலக அளவிலான கல்வியை எட்டி உள்ளார். ஆனால் ஏழைபெண்கள் இத்தகைய கல்வி அறிவை எட்ட 2080 ஆண்டு வரை ஆகலாம் . 

உலக அளவில் கல்விக்கு அரசுகள் 129 பில்லியன் டாலர்களை செலவு செய்கிறது . உலக மக்கள் தொகையில் 10 நாடுகளில் 557 மில்லியன் அல்லது 72 சதவீத கல்வி அறிவு இல்லாதவர்கள் உள்ளனர். இந்த சூழ் நிலையில் ஏழை நாடுகளில் 4 இல் 1 இளைஞர்கள் ஒற்றை வரியை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்தியாவில் பணக்கார மாநிலமாக கேரளாவில் கல்விக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு மனிதனுக்கு 685 டாலர் செலவிடப்படுகிறது.

கிராமப்புற இந்தியாவில் பணக்கார மற்றும் ஏழை மாநிலங்கள் என வேறுபாடுகள் உள்ளன. ஏழை மாணவிகள் கண்க்கு பாடத்தில் மிகவும் பலவீனமாக உள்ளனர்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் பணக்கார மாநிலங்களில் பெரும்பாலான கிராமப்புற குழந்தைகள் 5-ம் வகுப்புக்கு மேல் படித்து உள்ளனர்.எனினும் மகாராஷ்டிராவில் 44 சதவீத குழந்தைகளும், தமிழ்நாட்டில் 55 சதவீத குழந்தைகளும் படித்து உள்ளனர்.

பணக்கார மற்றும் கிராமபுற மாநிலங்களில் மாணவிகள் மாணவ்ர்களை விட சிறப்பாக படிக்கின்றனர்.

நன்றி: தினத்தந்தி,ஜன.29.2014

No comments:

Post a Comment